கடலின் மத்தியில் ஓர் கிராமம் - அனலைதீவு


கடலின் மத்தியில் ஓர் கிராமம் - அனலைதீவு

அகல்யா பிரான்சிஸ்கிளைன் அகிலன் கதிர்காமர்

யாழ் நகரிலிருந்து அனலை தீவிற்கு புறப்படுவோமாயின் ஊர்காவற்துறைக்கு ஒரு மணித்தியாலம் பஸ்சில் பயணித்து பின் 45 நிமிடங்கள் தனியார் படகில் 50ரூபா பற்று சீட்டுடன் ஏறினால் அங்கு ஆசிரியர்கள்இ அரசாங்க ஊழியர்கள்இ பெற்றோருடன் பிள்ளைகள்இ மூட்டைகளுடன் வர்த்தகர்கள் மற்றும் படகின் மேல் மோட்டார் சைக்கில்களும் லீசிங் வர்த்தகர்களின் பொருட்களும் காணலாம். அவ்வாறே கடலில் பயணிக்கும் போது சிறு சிறு அலைகள் படகினை மெல்ல மோதி படகு ஆடி ஆடி நகர சிறு தீவுகளின் அழகான காட்சிகளை அனுபவிக்கலம். இவ் அழகினை ரசித்தபடி ஜெட்டியை அடைந்தால் அங்கு ஓர் பஸ்சும் பல ஆட்டோக்களும் தீவின் உள் போக்கு வரத்திற்காக காத்திருக்கும்.
புவியியல் ரீதியாக யாழ்ப்பாண மாவட்டத்தின் விளிம்பு நிலையிலிருக்கும் தீவுகளில் மிக கூடிய தூரத்திலிருக்கின்றது நெடுந்தீவு அதற்கடுத்ததாக நையினாதீவும் அனலைதீவும் காணப்படுகின்றது. தீவுகளில் விவசாயம் செய்வதற்கு நன்னீர் கிடைப்பது மிகவும் அருமையாக இருந்த போதும் அனலைதீவில் விவசாயத்திற்கு ஏற்ற மண் மற்றும் நீர் வளங்கள் போதியளவு இருக்கின்றது. கடற்தொழில்இ விவசாயம் என வடமாகாணத்தின் இரு முக்கிய பொருளாதார துறைகளும்; அனலைதீவில் இயங்குகின்றது. பனைவளங்கள் மிகுந்த இந்த தீவல் பனை மூலப்பொருட்கள் சம்மந்தப்பட்ட தொழில்களை செய்வோரும் வசித்து வருகின்றனர்.
கடற்தொழிலும் விவசாயமும்
இந்தியா மாநிலத்திற்கு அண்மையிலலிருக்கும் தீவுப்பகுதிகளில்  ஒன்றான அனலைதீவும் இந்தியா இழுவைப்படகுகளின் அத்து மீறல்களால் அதீத பாதிப்பை அடைந்துள்ளது. கடல் வளங்கள் அழிந்ததன் காரணமாக மீனின் உற்பத்தி குறைந்துள்ளது. இழுவைப்படகுகள் வரும் நாட்களில் கடலிற்கு போகாமல் இருப்பதனால் இக்கிராமத்தினுடைய தொழிலாளர்களின் வருமானம்; பாதிக்கப்பட்டுள்ளது. சந்தைப்படுத்தல் இவர்களுக்கு பாரிய பிரச்சனை. உள்ள10ரில் மாத்திரமே சந்தைப்படுத்த முடிகின்றது. வேறு இடங்களுக்கு விநியோகிப்பதாயின்இ  படகுகளிலே 11 மணிக்கு பின்னர் யாழ் கொட்டடி சந்தைக்கு கொண்டு செல்கின்றார்கள் அதற்குள் மீன்கள் பழுதடைந்து விடலாம். ஏனெனில் மீன்களை சேமித்து வைக்க குளிரூட்டிவசதிகள் தேவைப்படுகின்றன்.
வடமாகாணத்தின் விவசாயிகள் காலநிலை வரட்சி காரணமாக அறுபடையினை பெறமுடியாது பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ளார்கள். இத் தீவு மக்களும் மழை மற்றும் கிணற்றினை நம்பி விவசாயம் செய்வதனால் இதே பிரச்சனையை சந்திக்கின்றார்கள். இங்கு புகையிலை வெங்காயம் மிளகாய் நெல் போன்ற பயிர்கள் ஒரு போகம் மாத்திரம் செய்யப்படுகின்றன. 1960வதுகளில் சின்ன சிங்கப்பூர் என இக்கிராமத்தினை அழைக்கும் அளவில் விவசாயம் மிகவும் சிறபுற்று பொருளாதார முன்னேற்றத்தினை அடைந்திருந்தது.  தென் இலங்கைக்கு கூட பணப்பயிர்களை இங்கிருந்து ஏற்றுமதி செய்தார்கள். ஆனால் இன்று அறுபடை பெற முடியாது பொருளாதார வீழ்ச்சியை சந்திக்கின்றார்கள்.
சமூக பொருளாதார சவால்கள்
பெண்களின் நிலையினை நோக்குகையில் இவர்களில் சிலர் கூலிவேலைக்கு செல்கின்றார்கள். சில பெண்கள் தையல் பனைவேலைகள் என பல வேலைகள் பழகியுள்ள்ள போதும் இவ் வேலைகளை முன்னெடுக்க உள்கட்டுமான வசதிகள் குறைவாக இருக்கின்றன. ஒரு சில பெண்கள் வீட்டில் வைத்து தையல் தொழிலை புரிகிறார்கள் மற்றும் சிலர்  வலைகளை தைக்கின்றார்கள்.
இத்தீவின் மூன்று பாடசலைகளில் இரண்டு பாடசாலைகள் தரம் 1-5 வரையானவை மற்ற பாடசாலை தரம் 6-13வரை காணப்படுகின்றது கடந்த இரண்டு வருடங்களிற்கு முன்னரே தரம்13 ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதுவும் கலைப்பிரிவு மாத்திரமே தற்போது கற்பிக்கப்பட்டுகின்றது. ஏனைய துறையினை பயில்கின்ற மாணவர்கள் ஊர்காவற்துறைக்கு செல்ல வேண்டியுள்ளது. தரம் 11 6வருடங்களுககு முன்; ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இப்பாடசாலைகளுக்கு வேறு இடங்களிலிருந்து ஆசிரியர்கள் பணியாற்றுகின்ற போது போக்குவரத்து பிரச்சனையை எதிர் கொள்வதால் பொரும்பாலான ஆசிரியர்கள் இங்கு சென்று கல்வி கற்பிப்பதனை விரும்புவதில்லை. தனியார் கல்வி நிறுவனங்கள் ஏதும் இல்லாததால் பிள்ளைகளை பகுதி நேர வகுப்பிற்கு அனுப்ப முடியவில்லை என இக் கிராமத்தவர்கள் கூறுகிறார்கள். உயர் கல்வியினை பயில ஊர்காவற்துறைக்கு செல்ல வேண்டியிருப்பதால் பாடசாலையிலிருந்து சில மாணவர்கள் இடைவிலகி கொள்கிறார்கள்.
இங்கிருக்கும்  வைத்தியசாலையில் அதிக வசதி வாய்ப்புக்கள் இல்லை. கர்ப்பிணிதாய்மார் மற்றும் சிறுபிள்ளைகளுக்கு மாதாந்தம் போடும் ஊசிகளுக்கு ஊர்காவற்துறைக்கு செல்ல வேண்டியிருக்கின்றது. வைத்தியர்கள் இங்கு திங்கள் முதல் வெள்ளி வரை பணி புரிகின்றனர். சனிஇ ஞாயிறுகளில் நோய்வாய் படில் ஊர்காவற்துறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலையிலுள்ளார்கள். இரவு நேரத்தில் அவசர சிகிச்சை பிரசவம் போன்றவற்றிற்கு செல்வதாயின் தனியார்படகு அல்லது நேவியின் உதவியுடனே ஊர்காவற்துறை வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகின்றது தனியார் படகுகளில் செல்வதாயின் 2500ரூபா.
இங்கு கொண்டுவரப்படும் பொருட்கள் யாழ் நகரிலிருந்து தனியார் படகுகளில் வருவதனால் பொருட்களின் விலை 30 வீதம் அதிகமாகும். மேலும் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களினை யாழில் விற்பனை செய்வதற்கு போக்குவரத்து செலவுகள் பெரும் சவாலாக அமைகின்றது. மற்றும் மின்சார வசதிகள் சில இடங்களில் மாத்திரம் விஸ்திரிக்கப்பட்டுள்ளது.
ஓட்டு மொத்தமாக வடமாகாணத்தின் வேறு கிராமங்களின் உட்கட்டுமானங்களிலும் பார்க்க இத்தீவில் போக்குவரத்து வசதிகள் பெரியதொரு பிரச்சனையாகவுள்ளது. ஆனால் அனலைதீவில்; வங்கிகள் இல்லாவிட்டாலும் வடமாகாணத்தின் அண்மைக்கால நிதிமயமாக்கலின் தாக்கம் இங்குள்ளது. வங்கிகளிடமிருந்து கடன்இ நகையடைவுஇ பெண்கள் மத்தியிலான சிக்கன கடன் மற்றும் லீசிங் நுகர்வுகளினால் கடன்களில் மக்கள் மூழ்கியிருக்கின்றார்கள்.
இக்கிராமத்தில் பொலிஸ் இல்லை. சில சமூக வன்முறைகள் பிரச்சனைகள் தோன்றும் போது கிராமசேவகரே அதை தீர்த்து வைக்க வேண்டிய நிலமையிலுள்ளார். ஆனால் யுத்தகாலத்திலிருந்து இன்று வரை நேவியின் அழுத்தங்கள் இக் கிராமத்திலிருப்பதாக கூறப்படுகின்றது. மற்றும்  இங்கு பல நோக்கு கூட்டுறவு சங்கம் இயங்குகின்றதுஇ ஆனால் அதனுடைய செயற்பாடுகள் குறைவாகவே காணப்படுகின்றது.
கடந்த தசாப்தங்களாக பேரின் பாதிப்பு உட்கட்டுமானஇ பிரச்சனைகள்இ இடப்பெயர்வு  மற்றும் புலப்பெயர்வுகளால் அனலைதீவினுடைய சனத்தொகை 3000குடும்பங்களிலிருந்து தற்போது 600குடும்பங்களாக குறைந்துள்ளது. இவ்வாறு  வடமாகாணத்தில் பல விளிம்;புநிலை கிராமங்கள் இருந்த போதும் அனலைதீவு புவியியல் ரீதியாகவும்இ புலப்பெயர்வுஇ இடப்பெயர்வுஇ பொருட்களின் விலை; போன்ற காரணங்களினால்; மிகவும் பின்னோக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
கிராமப்புற வாழ்க்கையை மேம்படுத்தல்
இலங்கையில் அண்மைக்காலத்தில் நகரமயமாக்கல் மற்றும் நகரத்தை நோக்கிய இடப்பெயர்வு அதிகரித்தே வருகின்றது. இந்நிலையில் கிராமப்புற வாழ்கையின் எதிர்காலம் மற்றும் உள்ளாற்றல் என்னவென்ற கேள்வி எழும்புகின்றன.
அனலைதீவு போன்று புவியியல் மற்றும் சமூகரீதியாக விளிம்பு நிலையில்லிருக்கும் கிராமத்தின் மேம்பாடு தற்போது அவசியமாக விவாதிக்கப்பட வேண்டும். ஏனெனில் நகரத்திற்கு செல்வோரில் ஒரு சிலருக்கு தான் அங்கு வேலைவாய்ப்புக்கள் இருக்கின்றது. மற்றும் கிராமங்களில் மிஞ்சியிருப்போர் சமூக புறந்தள்ளல்களினால்; ஒதுக்கப்படாமல் அவர்களுடைய சமூக பொருளாதார வளர்ச்சிக்கான தீர்வுகளை தமிழ் புத்திஜீவிகளஇ; வடமாகாணசபை மற்றும் இலங்கை அரசாங்கம் கவனத்தில் எடுக்க வேண்டும்.
இந்த கட்டத்தில் அனலைதீவிற்கு மேற்குறித்தவாறு பலவிதமான உட்கட்டுமானங்கள் மற்றும் அரசசேவைகள் தேவைப்படுகின்றன. இதற்குள் கல்விஇ சுகாதாரம்இ பாதுகாப்புஇ போக்குவரத்து போன்ற உட்கட்டுமான தேவைகள் குறிப்பிடத்தக்கவை. ஆனால் இதற்கு மேலாக இத் தீவினை மேம்படுத்துவதற்கு உள்ளுர் வாய்ப்புக்களுமே மிக முக்கியமான சவாலாக அமைகின்றன. இங்கு கடற்தொழில் விவசாயம் மற்றும் பனைவேலைகள் அத்துடன் பெண்களுடைய வேலைவாய்ப்புகளுக்கு அரசாங்க முதலீடுகள் தேவையாக இருக்கின்றது. கடற்தொழிலை பொறுத்தவரையில் இந்திய இழுவைப்படகு பிரச்சனையை தீர்ப்பது அவசியம். விவசாயத்தின் வளர்ச்சிக்கு மாற்று பயிர்களஇ; நெல்லின் உற்பத்தி போன்ற முயற்சிகளுக்கு உதவிகளும் ஆலோசனைகளும் தேவைப்படுகின்றது. அத்துடன் பனைஉற்பத்தி மற்றும் பெண்களின் தையல் வேலைகளுக்கு கைத் தொழில் நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட வேண்டும்.
இத்தீவின் முக்கியத்தவர்கள் கூறுகையிலஇ; போக்குவரத்து உட்கட்டுமானங்கள; விவசாயத்திற்கான இயந்திரங்கள் மற்றும் உற்பத்திக்கான மில் என்பன இந்த தீவின் பொருளாதாரத்தை வளர்க்க உதவும் என்கின்றார்கள். சமூக பொருளாதார வளர்ச்சியை அணுகும் போது ஒரு கிராமத்தின் மக்களுடைய கூட்டு செயற்பாட்டு அபிவிருத்தியை சாத்தியமாக்கும். இங்கு ஏற்கனவே இயங்கி வரும் பல நோக்கு கூட்டுறவு சங்கத்தை பலப்படுத்துதல்இ மேல் வசதிகளை கூட்டுறவினூடாக இயங்க வைத்தல் மற்றும் போக்குவரத்து பிரச்சனைகளை அரசாங்கதுறை அல்லது கூட்டுறவு முயற்சியினால் முன்னெடுப்பதன் ஊடாக உற்பத்தி மற்றும் விநியோகித்தலில் அந்ந சமூகத்திற்கு பல முன்னேற்றங்கள் வரலாம். இவ்வாறான கிராமப்புற மேம்பாட்டினை வடமாகாண சபை முக்கியப்படுத்தல் அவசியமாகும்.

2013ம் ஆண்டு கற்சிலைமடு பாடசாலை ஒன்றில் இடம் பெற்ற சாதிய ஒடுக்கு முறை


2013ம் ஆண்டு கற்சிலைமடு பாடசாலை ஒன்றில் இடம் பெற்ற சாதிய ஒடுக்கு முறை

                               வன்னி  மக்கள் இறுதி யுத்ததின் போது பல உயிர்கள் சொத்துக்களை இழந்து இருப்பதற்கு இடமின்றி பல இடங்களில் இடம் பெயர்ந்து இறுதியில் முகாம்களில் வசித்து  தற்போது தமது சொந்த இடங்களில் வசித்து வருகிறார்கள். எம் மக்கள் எத்தனை இழப்புக்கள் அழிவுகளை சந்தித்த போதும் சாதிய உணர்வை மட்டும் என்றும் கைவிட மாட்டார்கள்.
                             நான்; அண்மையில் கற்சிலை மடு என்னும் கிராமத்திற்கு சென்று அவர்களுடன் பல விடையங்கள் தொடர்பாக  உரையாடினேன் அப்போது பாடசாலை ஒன்றில் சாதிரீதியாக இடம் பெற்ற ஒடுக்கு முறை தொடர்பாக ஒரு பெண் கூறுகையில்
                               2013ம் ஆண்டு ஜப்பசி மாதம் கற்;சிலைமடு பாடசாலை ஒன்றில் வாணிவிலா கடைசிநாளில் ஒரு கிராமத்திலுள்ள பிள்ளைகள் வீட்டிவிருந்து சாப்பாட்டு பொருட்கள் செய்து கொண்டு சென்று இருக்கிறார்கள். ஆனால் ஆசிரியர்கள் இவற்றை வாங்கி சாப்பிடவில்லை ஏனெனில் ஆசிரியர் சாப்பிட தொடங்கும் போது அப்பாடசாலையில் கல்விபயிலும் சில உயர்சாதி மாணவர்கள் ஆசிரியருக்கு கூறினார்கள் இவ்வுணவு செய்த மாணவர்கள் குறைந்த சாதி மாணவர்கள் வாங்கி சாப்பிட வேண்டாம் என்று கூறியதும் அந்த ஆசிரியர்களும் வாங்கி உண்ணவில்லை உயர்சாதி பிள்ளைகளும் சாப்பிடவில்லை இதனால் செய்து கொண்டு போன பிள்ளைகள் தாம் ஏன் குறைந்த சாதியில் பிறந்தோம் என்று கவலைபட்டார்கள்;
                                       கடையிலை மட்டும்; சாப்பாடு வாங்கி சாப்பிடும் போது என்ன சாதி என்று கேட்டா வாங்கி சாப்பிடுகிறார்கள் ஆனால் ஊருக்க மட்டும் சாதி குறைந்தவர்களின் வீடுகளில் வாங்கி சாப்பிடமாட்டார்கள். ஏனென்றால் ஊருக்க தான் தெரியும் அவர் அவர் என்ன சாதி என்று அவ் மாணவர்கள் கூறி கவலையடைந்தார்கள் எவ்வாறு நாங்கள் கல்வி கற்று முன்னேற்றம் அடைந்தாலும் சாதிய ஒடுக்கு முறை என்பது எம்மை விட்டு இன்றும் நீங்கவில்லை என்று அவ் மாணவர்கள் கூறினார்கள்.
                                ஆசிரியர் என்பவர்கள் பெரிய அறிவாளிகள் என நம்பி எம் பிள்ளைகளை எத்தனையோ மணித்தியாலங்கள் அவர்களிடம் கல்வி கற்க அனுப்புகின்றோம் ஆனால் பல ஆசிரியர்கள்; படித்த முட்டாள்களாக தான் விளங்குகிறார்கள்  அப் பிள்ளைகளுக்கு அவ்வாறு செய்யக்கூடாது என்று கூறுவதந்கு மாறாக தாங்களும் சாதிய முறையை கடைப்பிடிப்பவர்களாக விளங்குகிறார்கள் இவர்களின் படிப்புக்கள் எல்லாம் பட்டம் பதவிக்கும் மாத்திரமே காணப்படுகின்றது.
                                    எம்; மக்கள் எத்தனை பிரச்சனைகளை சந்தித்து உயிர்களை இழந்தாலும் சாதிய உணர்வினை மட்டும் மறக்கமாட்டார்கள்.அத்துடன் தமது பிள்ளைகளுக்கு போதிய கல்லியறிவை ஊட்ட மறந்தாலும் சாதிய உணர்வினை மட்டும் சிறுபராயத்திலிருந்து ஊட்ட மறக்க மாட்டார்கள்

விளிம்பு நிலையிலுள்ள ஊரி கிராமத்து மக்களின் நிலை

விளிம்பு நிலையிலுள்ள ஊரி கிராமத்து மக்களின் நிலை

யாழ்ப்பாணத்தில் விளிம்புநிலையிலிருக்கும் கிராமங்களில் ஊரி கிராமமும் ஒன்றாகும் இக்கிராமம் காரைநகர் பிரதேசத்தில் பாலாவோடை கிராமத்திற்கு அண்மையில் j/44 கிராமசேவகர் பிரிவில் அமைந்துள்ள வறிய கிராமம். இங்கு 316 குடுப்பங்கள் வசிக்கிறார்கள.; இவ் மக்கள் 1987- 1995 ம் ஆண்டு காலப்பகுதிகயில் பல இடப் பெயர்வுகலை சந்தித்து பல இடங்களுக்கும் இடம் பெயர்ந்து சென்றார்கள் தற்போது இக்கிராமத்திலே நிரந்தரமாக வசித்து வருகிறார்கள். இங்குள்ள மக்கள் காலநிலைக்கு ஏற்ப கூட்டுவலை மீன்; பிடி தொழில் சீவல் தொழில் என 2 தொழில் புரிந்து வருகிறார்கள். இக்கிராமத்திலுள்ள பெண்கள் ஆண்களோடு இணைந்து கடற்தொழில் புரிகிறார்கள். இவர்களுக்கு அருகில் சிறிய கடல் காணப்படுவதால் மீன்கள் பிடிக்க முடிவதில்லை நண்டு இறால் போன்றவை தான் இவர்களால் பிடிக்க முடிகின்றது. இதனால் அதிகளவில் இலாபத்தினை பெற முடியவில்லை இவர்களினால் 300 ரூபாவுக்குள்ளே நாளாந்த வருமானமாக உழைக்க முடிகின்றது.
இக்கிராமத்திலுள்ள மக்கள் அதிகம் தரம் 7 11வரையே படித்துள்ளார்கள் இவர்கள் கல்வி கற்பதற்கேற்ப பொருளாதார சூழ்நிலைகள் அமையவில்லை. தற்போது இரண்டு  பிள்ளைகள் தான் பல்கலைக்கழகம் சென்றுள்ளார்கள். பொருளாதார வசதி மிகவும் குறைந்துள்ளதால் இவர்கள் தனியார் நிலையங்களுக்கு சென்று கல்வி கற்க முடியவில்லை. தற்போது போதகர் கமல் தலைமையில் ரியூசன் ஒன்றினை  நடாத்தி வருகிறார்கள் இலவசமாக. பல ஆசிரியர்களும் இங்கு வந்து கல்வி கற்பிக்கிறார்கள். வெளிநாட்டில் உள்ள சிலரின் ஒத்துழைப்புடன் இங்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பணம் கொடுக்படுகின்றது.
இங்குள்ள மக்கள் பல பிரச்சனைகளை எதிர் கொள்கிறார்கள் அதில் ஒன்று சாதி ஆரம்ப காலங்களில் இருந்து இன்று வரை யாழ்ப்பாணத்தில் உள்ள பெரும் பாண்மை மக்களினால் பேச விருப்பப் பாடாத ஒன்றாக சாதி விளங்குகின்றது. இப்பிரச்சனை எங்கள் சமூகத்தில் இல்லை என்று கூறிக் கொண்டு சாதி பார்க்கும் அறிவாளிகள் தான் எம்  சமூகத்தில் உள்ளார்கள். இங்கு சாதியின்னையா? அல்லது சாதி மறைப்பா? என்ற நிலைதான் யாழ்கிராமங்களில் காணப்படுகின்றது. அந்த வகையில் தான் இக்கிராம மக்களும் உள்ளார்கள். இக்கிராம மக்கள் சாதிய கட்டமைப்பில் மிகவும் குறைந்தவர்களாக இருக்கிறார்கள் என யாழ்ப்பாணத்தில் உயர்சாதியினர் என்னு தம்மை கூறிக் கொள்பவர்களால் அழைக்கப்படுகின்றார்கள். இக்கிராமத்திற்கு அண்மையில் பாலாவோடை என்ற கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் வசிப்பவர்கள் வெள்ளாளர் என்று தம்மை கூறிக் கொள்கிறார்கள்;. இவர்கள் பல சாதிய ஒடுக்கு முறைகளினை ஊரி கிராம மக்கள் மேல் புரிகிறார்கள்.
யாழ்சமூகத்தில் சாதிக்கொரு கோவில்கள் என ஆரம்ப காலங்களிலிருந்து இன்று வரை இருந்து வருகின்றது இந்த வகையில் தான் இக்கிராமத்திலும் அதே நிலமைதான் காணப்படுகின்றது. 1990ம் ஆண்டு காலப்பகுதிகளில் ஊரிகிராம மக்கள் பாலாவோடை கிராமத்திலுளள்ள அம்மன் கோவிலினுள் தேர் திரு விழா ஒன்றுக்கு சென்று அத் தேரை தொட்டு விட்டார்கள் என்பதற்காக தம்மை உயர்சாதிஎன கூறிக் கொள்ளும் பாலாவோடை மக்கள் அத் தேரினையே எரித்தார்கள்.
1996ம் ஆண்டு காலப்பகுதிகளில் ஊரிகிராம மக்கள் பாலோவோடை கிராமத்தினுள் நுழைந்து விட்டார்கள் என்பதற்காக இரு கிராமத்தவர்களுக்கிடையிலும் பாரிய சண்டை ஏற்பட்டது இதனால் இன்று வரை இரண்டு கிராம மக்களுக்கும் எந்த வித தொடர்பாடல்களும் அற்ற வகையில் வசிக்கிறார்கள். இருகிராம மக்களுக்கும் என ஒவ்வொரு பொதுக்கிணறுகள் இருக்கின்றது. பாலோவோடை கிராமத்து மக்கள் ஊரிகிராமத்தவர்களின் கிணறுகளில் ஒரு போதும் தண்ணீர் அள்ள மாட்டார்கள். மற்றும் ஊரி கிராமத்து மக்களை தங்களது கிணறுகளில் தண்ணீர் அள்ள ஒருபோதும் இவர்கள் விடமாட்டார்கள்.
இக்கிராம மக்கள் தண்ணீர் பிரச்சனைகளினையும் எதிர் கொள்கின்றனர் ஆரம்ப காலங்களில் நல்ல தண்ணீர் ஊரி கிராமத்தில் காணப்பட்டது 1995ம் ஆண்டு இடப்பெயர்வின் பின் இக்கிராமத்தில் உள்ள கிணற்று தண்ணீர்கள் குடிக்க முடியா நிலை காணப்பட்டது. ஏனெனில் தண்ணீர் உப்புத் தண்ணீராக காணப்பட்டது. அதனால் இவர்கள் இன்று சுண்ணாகத்திலிருந்து கரைநகர் அபிவிருத்தி சங்கத்தினால் விநியோகிக்கப்படும் தண்ணீரினை பணம் கொடுத்து வாங்குகின்றார்கள்.
இக்கிராமத்திலுள்ள தரம் 1-5 வரையான மாணவர்கள் அமெரிக்கன்மிசன் தமிழ்கலவன் பாடசாலையில் கல்வி பயில்கிறார்கள். மேலதிக தமது கல்வியினை வலந்தன் சந்தியில் அமைந்திருக்கும் தியாகராஜா மகாவித்தியாலைய பாடசாலையில் 6-யுஃடு வரை கற்று கொள்கின்றனர். தியாகராஜா மகாவித்தியாலைய கல்லூரி இக்கிராமத்திலிருந்து 6மஅ தூரத்தில் அமைந்துள்ளது. இவர்கள்; பாடசாலைக்கு நடந்து செல்வதனால் பிந்தி பாடசாலை செல்ல வேண்டிய நிலமை காணப்படுகின்றது. எனவே இவர்கள் பாடசாலை நேரத்திற்கு செல்வதற்கு இக்கிராமத்தில் தற்போது ஊழியம் செய்கின்ற போதகர் கமல் சீரிபி பஸ்சினை பிள்ளைகளுக்கு ஒழுங்கு செய்து கொடுத்துள்ளார். 100மாணவர்கள் இங்;கிருந்து இப்பாடசாலைக்கு பஸ்சில் சென்று வருகின்றார்கள். ஆரம்பத்தில் இக்கிராமத்திற்கு பஸ் வந்த போது பல பிரச்சனைகளினை இவர்கள் எதிர்கொண்டார்கள் அதாவது பஸ்சினை இக்கிராமத்திற்கு விடமாட்டோம் என்று பிரச்சனைப்பட்டார்கள் பின்னர் பஸ்சை ஒழுங்கான நேரத்திற்கு பிள்ளைகளுக்கு விடவில்லை. மற்றும் பாலோவோடை பொது மக்களினையும் பஸ்ஸில் ஏற்றி கொண்டு சென்றார்கள் இதனால் பாடசாலை பிள்ளைகள் பஸ்சில் ஏற முடியேல நிலமை காணப்பட்டது பின்னர் பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் தற்போது பாடசாலை பிள்ளைகள் மட்டும் பஸ்சில் செல்ல ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. பாலோவோடை கிராம மக்களுக்கு இங்கு பஸ் செல்வது விருப்பமில்hமையால் 2012ம் ஆண்டு காலப்பகுதியில் பஸ்சினையே கொளுத்தும் அளவிற்கு சென்றார்கள்.  இப் பாலாவோடைகிராமத்தவர்கள் சாதி வெறி பிடித்த முட்டாள்களாக விளங்குகின்றார்கள்.
தியாகராஜா பாடசாலைக்கு இக் கிராமத்திலிருந்து பாடசாலை செல்லும் பல பிள்ளைகள் பாலாவோடை கிராமத்து ஆசிரியர்களினாலும் மாணவர்களினாலும் பல பிரச்சனைகளினை எதிர் கொள்கிறார்கள். ஆசிரியர்கள் இவர்களை பெயர் சொல்லி அழைப்பதில்லை அதிகளவில் இவ் மாணவர்களினை பேசிக் கொள்கிறார்கள். மற்றும் இவர்களினை கவனம் எடுத்து கல்வி கற்பிப்பதில்லை வகுப்பின் பிற்பகுதியிலே இவர்களினை இருத்தி கொள்கிறார்கள். பாலாவோடை மாணவர்களும் இவர்களுடன் இணைந்து கதைத்து கொள்வதில்லை அவ்வாறு கதைத்த கொண்டாலும் பாடசாலைகில் மட்டுமே வீட்டீற்கு வந்தவுடன் இவர்களினை யார் என்றே தெரியாதமாதிரி நடந்து கொள்கிறார்கள்.
இக்கிராமத்திலுள்ள பிள்ளைகள்பெரும் பாலும் இளவயதில் திருமணம் செய்து கொள்கிறார்கள். இங்குள்ள பெண்கள் மீன்பிடி தொழிலுக்க ஆண்களுடன் இணையாக செல்கின்றார்கள் இதனை தவிர வேறு சுய தொழில்கள் செய்ய வில்லை சிலர்; தையல் பயிற்சியினை படித்துள்ளார்கள் ஆனால் தையல் மிசின் இல்லாததால் தையல் தொழில் செய்ய முடியவில்லை. இக்கிராமத்து பெண்கள் வேலை வாய்ப்புக்கள் அற்ற நிலையில் வீட்டு வேலைகளினை மட்டும் புரிந்து கொண்டு வாழ்கிறார்கள்.
இக்கிராமத்து மக்கள் சாதி பொருளாதார ரீதியாக பல பிரச்சனைகளினை எதிர் நோக்கி வருகிறார்கள். இவர்களின் இவ் நிலமை தொடர்பாக எந்த வித முன்னேற்ற செயற்பாடுகளும் யாரினாலும் இது வரை மேற் கொள்ளப்படவில்லை இவ்வாறான பல கிராமங்கள் யாழ்ப்பாணத்தில் இருப்பதாகவே பலர் அறியாமல் வாழ்கிறார்கள் இக்கிராமத்திலுள்ள மக்களில் ஒரு சில மக்கள் தனித்துவமாக முன்னேறிய போதும் இன்றும் அதிகமான மக்கள் சாதி பொருளாதார ரீதியாக சுரண்டப்பட்டு பின்னோக்கிய நிலையில் வாழ்கிறார்கள். ஒடுக்கப்படும் இச் சமூக மக்கள் எப்பொழுதுமே மையத்தை நோக்கி நகர முடியாது விளிம்பு நிலையிலே இருப்பதனை கண்டு கொள்ளலாம்.

அகல்யா. பிரான்சிஸ்கிளைன்